முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

#தீராக்கதை

ஓர் மலைப்பாம்பு படுத்துக் கொண்டிருப்பது போல அந்த தெரு காட்சியளித்தது. அந்த தெருவின் கடைசி வளைவிலிருந்து சிறுவர்கள் ஆகா.. ஓகோ.. என்று கத்திக்கொண்டே ஓடி வந்து கொண்டிருந்தார்கள். தெருவின் தலைப்பகுதியில் பரந்து..விரிந்த.. கம்பீரமானஆளமரமும்.. ஆளமரத்தின் அடியில்..தாழ்வான ஒரு ஓட்டு வீடும், வீட்டின்  தின்னைகளும்.. இயற்க்கையை சிதறாமல் கண்ணுக்கு பரிசலித்தது.. கண்களை சுருக்கிக் கொண்டு.. உரலில் பாக்கை இடித்துக் கொண்டு.. யாரையோ எதிர்பார்த்து காத்திருந்தாள் அந்த கதை-பாட்டி. "பாட்டி....பாட்டி.. இன்னைக்கு நான் தான் ஃபர்ஸ்ட்... 'நான் தான் ஃபர்ஸ்ட்' "என சிறுவர்கள் முட்டி மோதிக்கொண்டு , தின்னையில் இடித்துக்கொண்டு வந்து நின்றார்கள். "வாங்கடா ... இன்னைக்கு வரமாட்டிங்களோனு நினைச்சேன்... இன்னைக்கு‌‌ என்ன கொண்டுவந்திங்க." என்று நடுங்கிய குரலில் கூறி.. வாயில் வெற்றிலையை போட்டு அடக்கிக்கொண்டாள் கிழவி.. "இந்தாங்க எங்க வீட்ல இன்னைக்கு அதிரசம் செஞ்சாங்க.." என்று கையை நீட்டினான், "மணி". கிழவி...'கண்களை விரித்து பார்த்ததில் சுருக்கம் நீங்கி இருந்தது...