முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

#பட்டாம்பூச்சியின்_காப்பி

# பட்டாம்பூச்சியின்_காப்பி ராஜ் அவரின் வீட்டு பின்பக்க அறையில் ஜன்னல் வழியாக தோட்டத்தை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார். "வாங்க, நான் தான் ராஜ் இந்த மதிய வேளையில் எங்கள் வீட்டில் அனைவரும் சிறிய உறக்கம் கொள்வார்கள்.. ஆனால், எனக்கு இரவிலும் கூட தூக்கம் என்பதே வராது.. எதையாவது யோசித்தபடியே இருப்பேன்".. "டிவிங்...... ராஜின் வாட்ஸ்அப் மெசேஜ் குறுக்கிட்டது" "என் பொழுது போக்கே வாட்சப், பேஸ்புக், புத்தகங்கள் தான்".. வாட்சப்பில் வந்த செய்தியை படித்து விட்டு வேகமாக எழுந்து புத்தகங்கள் அடிக்கி வைத்திருக்கும் பகுதியில் எதையோ தேடினார்... "பட்டர்பிளை  எஃபெக்ட்"... "சென்னையில் சுனாமி வர காரணம் கூட இந்த பட்டர்பிளை எஃபெக்ட் ஆக இருக்கலாம் என்று வாட்சப் பில் எவனோ பார்வெட்  பன்னி இருக்கான்".. "என் நீண்ட நாள் தேடலும் அதுதான்.. இதோ "பட்டர்பிளை எஃபெக்ட்" பற்றிய புத்தகம்.." "இதில் பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த பெரிய விளைவுகள் அதே காலக்கட்டத்தில் நடந்த சிறிய நிகழ்வுகளுடன் தொடர்புள்ளதை  அலசி ஆராய்ந்து எழுதியுள்...

#தீராக்கதை

ஓர் மலைப்பாம்பு படுத்துக் கொண்டிருப்பது போல அந்த தெரு காட்சியளித்தது. அந்த தெருவின் கடைசி வளைவிலிருந்து சிறுவர்கள் ஆகா.. ஓகோ.. என்று கத்திக்கொண்டே ஓடி வந்து கொண்டிருந்தார்கள். தெருவின் தலைப்பகுதியில் பரந்து..விரிந்த.. கம்பீரமானஆளமரமும்.. ஆளமரத்தின் அடியில்..தாழ்வான ஒரு ஓட்டு வீடும், வீட்டின்  தின்னைகளும்.. இயற்க்கையை சிதறாமல் கண்ணுக்கு பரிசலித்தது.. கண்களை சுருக்கிக் கொண்டு.. உரலில் பாக்கை இடித்துக் கொண்டு.. யாரையோ எதிர்பார்த்து காத்திருந்தாள் அந்த கதை-பாட்டி. "பாட்டி....பாட்டி.. இன்னைக்கு நான் தான் ஃபர்ஸ்ட்... 'நான் தான் ஃபர்ஸ்ட்' "என சிறுவர்கள் முட்டி மோதிக்கொண்டு , தின்னையில் இடித்துக்கொண்டு வந்து நின்றார்கள். "வாங்கடா ... இன்னைக்கு வரமாட்டிங்களோனு நினைச்சேன்... இன்னைக்கு‌‌ என்ன கொண்டுவந்திங்க." என்று நடுங்கிய குரலில் கூறி.. வாயில் வெற்றிலையை போட்டு அடக்கிக்கொண்டாள் கிழவி.. "இந்தாங்க எங்க வீட்ல இன்னைக்கு அதிரசம் செஞ்சாங்க.." என்று கையை நீட்டினான், "மணி". கிழவி...'கண்களை விரித்து பார்த்ததில் சுருக்கம் நீங்கி இருந்தது...

மரமும் மனிதனும்.

மரமும் மனிதனும்...(குறுங்கதை) கி.பி 2150 ல் ஒரு நாள்..... " அங்க என்னடா ஒரே கூட்டமா இருக்கு".. இயற்க்கையாவே ஆக்ஸிஜன் தருகிற "மர்ம பொருள்" ஒன்று பூமியிலிருந்து வெளிவந்துள்ளதாம்.. அந்த வீட்டு சொந்தகாரர் பணம் வசுலித்துக் கொண்டு ஆட்களை அனுமதிக்கிறாராம்.. வாயேன்... நாமும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம்... இல்லடா.....என்னோட "ஆக்சிஜன் சிலின்டர்ல" ஆக்சிஜன் 18%. தான் இருக்கு நான் போய் 'லைப் பாய்ன்ட்' ல ஜார்ஜ் போடனும்..  ஜார்ஜ் ஃபுல் பன்னிட்டு வரேன்.. ஆமா அந்த மர்ம பொருளுக்கு பெயர் என்ன வெச்சிருக்காங்க!? " மரம் ". கி.மு 210000 வருடம் ஒரு காட்டில் இரண்டு மரங்கள்.. "என்ன இது புதிய ஜந்துவாக இருக்கிறது" ஆமாம்...பாவம் ஒதுங்க நிழல் தருவோம். என்ன இப்படி துடிக்கிறான், பாவம் சாப்பிட பழங்கள் தருவோம்.. சில வாரங்களுக்கு பின்.. அங்கே பார் வீரநடை போட்டு அந்த ஜந்து வருகிறது.. ஆமாம் ஆனால் கையில் ஏதோ வைத்திருக்கிறானே.. "ஏ....ஏ.......மரம் கத்தி முடிப்பதற்குள் அதன் ஒரு கையை வெட்டி இரு...

மிருகங்களை_நேசிப்போம்

" என்னுடைய முதல் சிறுகதையை இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தவறிருப்பின் மன்னியுங்கள்." மிருகங்களை_நேசிப்போம் . ஐந்து நாய்க்குட்டிகள் ஒன்றோடு ஒன்று துள்ளிக்குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. தனது அம்மாவின் மீது ஏறி இறங்கி சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தது.. ஏதும் சலனமின்றி..கிட்ட தட்ட இறந்த போன உருவம் போல, வயிரெல்லாம் ஒட்டி போய் எதையோ வேடிக்கை பார்த்தவாறு அந்த நாய் தன் பிள்ளைகளின் சேட்டையை கண்டுக்காமல் படுத்திருந்தது... அந்த சமயம் ஒரு கல் நாயின் மூக்கில்..பட்டு ரத்தம் தெறித்தது.."திடுக்கிட்டு" வேகமாக எழுந்து குட்டிகளை விட்டு ஓடாமல் கதறியது....குட்டிகள் பயத்தில் தாய்க்கு முன் ஒரு புதிரில் சென்று ஒளிந்து கொண்டது...தாயும் அந்த புதரில் சென்று மறைந்து கொண்டது.. "எப்ப பாரு வீட்டு வாசலிலேயே படுத்துட்டு கெடக்குது...என்னைக்கு சாவடிக்க போறேனு தெரில"..என்று சொல்லி கொண்டே ஒரு வாலிபன் தன் வீட்டுக்குள் சென்று மறைந்தான்.. அதன் பின் சிறிது நாட்கள் அந்த நாய் அவன் கண்ணில் படவேயில்லை... ஒருநாள் மதிய வேளையில் வீடு திரும்பினான் அவன். அதே..காட்சி...