மரமும் மனிதனும்...(குறுங்கதை) கி.பி 2150 ல் ஒரு நாள்..... " அங்க என்னடா ஒரே கூட்டமா இருக்கு".. இயற்க்கையாவே ஆக்ஸிஜன் தருகிற "மர்ம பொருள்" ஒன்று பூமியிலிருந்து வெளிவந்துள்ளதாம்.. அந்த வீட்டு சொந்தகாரர் பணம் வசுலித்துக் கொண்டு ஆட்களை அனுமதிக்கிறாராம்.. வாயேன்... நாமும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம்... இல்லடா.....என்னோட "ஆக்சிஜன் சிலின்டர்ல" ஆக்சிஜன் 18%. தான் இருக்கு நான் போய் 'லைப் பாய்ன்ட்' ல ஜார்ஜ் போடனும்.. ஜார்ஜ் ஃபுல் பன்னிட்டு வரேன்.. ஆமா அந்த மர்ம பொருளுக்கு பெயர் என்ன வெச்சிருக்காங்க!? " மரம் ". கி.மு 210000 வருடம் ஒரு காட்டில் இரண்டு மரங்கள்.. "என்ன இது புதிய ஜந்துவாக இருக்கிறது" ஆமாம்...பாவம் ஒதுங்க நிழல் தருவோம். என்ன இப்படி துடிக்கிறான், பாவம் சாப்பிட பழங்கள் தருவோம்.. சில வாரங்களுக்கு பின்.. அங்கே பார் வீரநடை போட்டு அந்த ஜந்து வருகிறது.. ஆமாம் ஆனால் கையில் ஏதோ வைத்திருக்கிறானே.. "ஏ....ஏ.......மரம் கத்தி முடிப்பதற்குள் அதன் ஒரு கையை வெட்டி இரு...
எழில்மிகு தமிழில் ஏராளமான கதைகள் உள்ளன. அள்ள அள்ள வரும் கற்பனைகளை அழகு தமிழில் வடிப்பதில் ஆர்வம் கொண்டவன் நான். கற்பனைக்கு உருவம் காட்டி காட்சி அமைப்பது என் தாய் தமிழ்.