குமாருக்கு, அந்த தெரு நன்றாக ஞாபகமிருக்கிறது. அந்த தெருவை அடைந்தால் அதிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி தெருவை ஒட்டியபடி படிக்கட்டுகள் கொண்ட அந்த வீட்டை கண்டுபிடிப்பது சுலபம். போனமுறை வந்தபோது ஒரு ரிக்க்ஷாகாரர் தான் அந்த தெருவை காட்டினார். "ருக்மணி தெருவா! நேரா போய் வலது பக்கமா திரும்புனா ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும் அதை ஒட்டி ஒரு தெரு போகும். அந்த தெருவுக்கு பக்கத்து தெரு தான் இந்த ருக்மணி தெரு. அங்க யார பாக்கனும்!?.. " கையில் ஒரு வரைபடைத்தை வரைந்து முடித்து கையை கீழே போடமலயே பார்த்துக்கொண்டிருந்தார். யாருக்கு தெரியும் இப்போ கூட அதே ரிக்க்ஷாகாரர் அங்கயே இருக்கலாம். ஒரு புன்முறுவலோடு பேருந்துக்கு வெளியே ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். சிறுவனாக இருந்தபோது தான் எந்த கவலையும் இல்லை. விளையாட்டு , தூக்கம் னு நிம்மதியா இருந்த நாட்கள். விடுமுறை நாட்களில் கூட சொந்த பந்தங்கள் எல்லாம் எங்க வீட்டுக்கு தான் வருவாங்க. பெரியவர்களெல்லாம் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, சிறுவர்கள் நாங்க எல்லாம் எங்க வீட்டு மாடிக்கு விளையாட ஓடுவோம். ஒரு மல்லிக்கொடி படிக்...
எழில்மிகு தமிழில் ஏராளமான கதைகள் உள்ளன. அள்ள அள்ள வரும் கற்பனைகளை அழகு தமிழில் வடிப்பதில் ஆர்வம் கொண்டவன் நான். கற்பனைக்கு உருவம் காட்டி காட்சி அமைப்பது என் தாய் தமிழ்.