"என்னுடைய முதல் சிறுகதையை இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
தவறிருப்பின் மன்னியுங்கள்."
மிருகங்களை_நேசிப்போம்.
தவறிருப்பின் மன்னியுங்கள்."
மிருகங்களை_நேசிப்போம்.
ஐந்து நாய்க்குட்டிகள் ஒன்றோடு ஒன்று துள்ளிக்குதித்து விளையாடிக் கொண்டிருந்தது.
தனது அம்மாவின் மீது ஏறி இறங்கி சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தது..
ஏதும் சலனமின்றி..கிட்ட தட்ட இறந்த போன உருவம் போல, வயிரெல்லாம் ஒட்டி போய் எதையோ வேடிக்கை பார்த்தவாறு அந்த நாய் தன் பிள்ளைகளின் சேட்டையை கண்டுக்காமல் படுத்திருந்தது...
அந்த சமயம் ஒரு கல் நாயின் மூக்கில்..பட்டு ரத்தம் தெறித்தது.."திடுக்கிட்டு" வேகமாக எழுந்து குட்டிகளை விட்டு ஓடாமல் கதறியது....குட்டிகள் பயத்தில் தாய்க்கு முன் ஒரு புதிரில் சென்று ஒளிந்து கொண்டது...தாயும் அந்த புதரில் சென்று மறைந்து கொண்டது..
"எப்ப பாரு வீட்டு வாசலிலேயே படுத்துட்டு கெடக்குது...என்னைக்கு சாவடிக்க போறேனு தெரில"..என்று சொல்லி கொண்டே ஒரு வாலிபன் தன் வீட்டுக்குள் சென்று மறைந்தான்..
அதன் பின் சிறிது நாட்கள் அந்த நாய் அவன் கண்ணில் படவேயில்லை...
ஒருநாள் மதிய வேளையில் வீடு திரும்பினான் அவன்.
அதே..காட்சி...
நாய்க்குட்டிகள் துறுதுறுவென்று தாயின் மீது ஏறி இறங்கி விளையாடிக்கொண்டிருந்தது..
இம்முறை முன்பை விட பெரிய கல்லை எடுத்து நாயின் தலையை குறிபார்த்து எறிந்தான்...
ஆனால், இம்முறை நாய்க்குட்டிகள் மட்டுமே சிதறி ஓடின..
அருகே சென்று பார்த்தான்,, அந்த நாய் " முன்பே இறந்திருக்கனும்" என யூகித்தான்...
" சாவுற நாய் வேற எங்கனா போய் சாகாம என் வீட்டு வாசல்தான் கிடைச்சுதா இதுக்கு...இரு உண்ண என்ன பன்றேன் பாரு" என்று உள்ளே சென்றான்.
ஒரு கோணிப்பையை எடுத்து வந்து இறந்து போன நாயையும்..அதன் "குட்டிகளையும் " விரட்டி பிடித்து கோணிப்பையில் போட்டு இருக கட்டினான்.
குட்டிகள் தன் தாய் முகத்திற்க்கு முன் கத்தியது..துடித்தது..." எப்படியும் அந்த புதரில் சென்று ஒளிந்துக்கொள்வோம் என்று போராடியது"..
அதற்க்குள் முடிச்சுகள் அவிழ்க்கபடாமலேயே..
ஒரு முட்புதரில் அந்த கோணிப்பையை வீசி எறிந்துவிட்டு, ஒரு சைக்கிள் வேகமாக போய்க்கொண்டிருந்தது.
வீட்டிற்க்கு வந்து தோட்டத்திற்க்கு சென்று கையை கழிவிவிட்டு வீட்டின் ஓரமாக வரும்போது தான் அவன் அதை பார்த்தான்...
"ஒரு கொடிய விஷ பாம்பை யாரோ!!! வீட்டிற்குள் நுழைய விடாமல் குதறி பல துண்டுகளாய் சிதறிப் போட்டுள்ளனர்""...
"மிருகங்களை நேசிப்போம்"
~சதிஷ்..
(நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக