முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

#பட்டாம்பூச்சியின்_காப்பி


#பட்டாம்பூச்சியின்_காப்பி



ராஜ் அவரின் வீட்டு பின்பக்க அறையில் ஜன்னல் வழியாக தோட்டத்தை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
"வாங்க, நான் தான் ராஜ் இந்த மதிய வேளையில் எங்கள் வீட்டில் அனைவரும் சிறிய உறக்கம் கொள்வார்கள்.. ஆனால், எனக்கு இரவிலும் கூட தூக்கம் என்பதே வராது.. எதையாவது யோசித்தபடியே இருப்பேன்"..
"டிவிங்...... ராஜின் வாட்ஸ்அப் மெசேஜ் குறுக்கிட்டது"
"என் பொழுது போக்கே வாட்சப், பேஸ்புக், புத்தகங்கள் தான்"..
வாட்சப்பில் வந்த செய்தியை படித்து விட்டு வேகமாக எழுந்து புத்தகங்கள் அடிக்கி வைத்திருக்கும் பகுதியில் எதையோ தேடினார்...
"பட்டர்பிளை  எஃபெக்ட்"...
"சென்னையில் சுனாமி வர காரணம் கூட இந்த பட்டர்பிளை எஃபெக்ட் ஆக இருக்கலாம் என்று வாட்சப் பில் எவனோ பார்வெட்  பன்னி இருக்கான்"..
"என் நீண்ட நாள் தேடலும் அதுதான்..
இதோ "பட்டர்பிளை எஃபெக்ட்" பற்றிய புத்தகம்.."
"இதில் பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த பெரிய விளைவுகள் அதே காலக்கட்டத்தில் நடந்த சிறிய நிகழ்வுகளுடன் தொடர்புள்ளதை  அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார்கள்."..
"மை ஃபேவரிட் புத்தகமும் கூட"...
"ஆனாலும் என் மனது இது எல்லாம் மனிதனின் ஆகச்சிறந்த கற்பனை திறனால் வந்த கோட்பாடுகள் தான்... உண்மையாக இருக்காது என்று சொல்லி கொண்டே இருக்கும்"...
"இதனையெல்லாம் விரும்பி படிக்கும் நான்..இதிலுள்ள கற்பனைகளை மட்டுமே வியந்து பார்க்கிறேன்"...
"பட்டர்பிளை எஃபெக்ட் உண்மை என்று நான் நம்ப மாட்டேன்"...
"சரி எனக்கு இப்ப தலை வலிக்குது.. காபி குடிக்கனும் போல இருக்கு.. எப்போதும் எங்கள் வீட்டில் அம்மா  மதிய வேலையில் தூங்கினால் 4 மணியளவில் தான் எழுந்து 5 மணியளவில் தான் காபி கிடைக்கும்... நான் பக்கத்தில் இருக்கும் டீ கடைக்கு செல்கிறேன்"...
"புத்தகத்தில் படித்த 'பட்டர்பிளை எஃபெக்ட்' பற்றிய  சுவாரஸ்யமான கற்பனைகளை வந்து கூறுகிறேன்"....
ராஜ் சட்டை யை மாட்டிக்கொண்டு ஜன்னல் வழியாக தோட்டத்தை பார்த்தான்...
அங்கு இரண்டு பட்டாம்பூச்சிகள் ஒவ்வொரு பூவிலும் அமர்ந்து , பறந்துக்கொண்டிருந்த அழகான காட்சியை பார்த்துக்கொண்டிருந்தான்..
திடீரென ஜன்னலின் ஓரமாக இருந்து ஒரு பட்டாம்பூச்சி "ராஜ்" ன் மூக்கில் வந்து அமர்ந்தது..
எதிர்பாராமல் வந்த பட்டாம்பூச்சியை பார்த்து திடுகிட்டு பின் நகர்ந்தான்... அருகில் இருந்த நாற்காலி மேல் சாயவே, நாற்காலி நகர்ந்து சென்று விழுந்தது...
விழுந்த நாற்காலியை எடுத்து போட்டு ஜன்னலின் வழியாக மீண்டும் அந்த இரண்டு பட்டாம்பூச்சிகளை பார்த்துக்கொண்டிருந்தான்..
நாற்காலி சப்தம் கேட்டு 'ராஜ்' ன் அம்மா தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டார்..
சீக்கிரம் எழுந்ததால் சீக்கிரமே காப்பி போட்டு "ராஜின்" மேசையில் வைத்துவிட்டு தலையை தடவி கொடுத்து விட்டு சென்றார்...
** ராஜ் காப்பியை பருகியபடி பட்டாம்பூச்சிகளை பார்த்துக்கொண்டிருந்தான்**...
~சதிஷ்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நினைவுகளில்_வீடு

     குமாருக்கு, அந்த தெரு நன்றாக ஞாபகமிருக்கிறது. அந்த தெருவை அடைந்தால் அதிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி தெருவை ஒட்டியபடி படிக்கட்டுகள் கொண்ட அந்த வீட்டை கண்டுபிடிப்பது சுலபம்.  போனமுறை வந்தபோது ஒரு ரிக்க்ஷாகாரர் தான் அந்த தெருவை காட்டினார். "ருக்மணி தெருவா! நேரா போய் வலது பக்கமா திரும்புனா ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும் அதை ஒட்டி ஒரு தெரு போகும். அந்த தெருவுக்கு பக்கத்து தெரு தான் இந்த ருக்மணி தெரு. அங்க யார பாக்கனும்!?.. " கையில் ஒரு வரைபடைத்தை வரைந்து முடித்து கையை கீழே போடமலயே பார்த்துக்கொண்டிருந்தார்.  யாருக்கு தெரியும் இப்போ கூட அதே ரிக்க்ஷாகாரர் அங்கயே இருக்கலாம். ஒரு புன்முறுவலோடு பேருந்துக்கு வெளியே ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். சிறுவனாக இருந்தபோது தான் எந்த கவலையும் இல்லை. விளையாட்டு , தூக்கம் னு நிம்மதியா இருந்த நாட்கள். விடுமுறை நாட்களில் கூட சொந்த பந்தங்கள் எல்லாம் எங்க வீட்டுக்கு தான் வருவாங்க. பெரியவர்களெல்லாம் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, சிறுவர்கள் நாங்க எல்லாம் எங்க வீட்டு மாடிக்கு விளையாட ஓடுவோம். ஒரு மல்லிக்கொடி படிக்...

மரமும் மனிதனும்.

மரமும் மனிதனும்...(குறுங்கதை) கி.பி 2150 ல் ஒரு நாள்..... " அங்க என்னடா ஒரே கூட்டமா இருக்கு".. இயற்க்கையாவே ஆக்ஸிஜன் தருகிற "மர்ம பொருள்" ஒன்று பூமியிலிருந்து வெளிவந்துள்ளதாம்.. அந்த வீட்டு சொந்தகாரர் பணம் வசுலித்துக் கொண்டு ஆட்களை அனுமதிக்கிறாராம்.. வாயேன்... நாமும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம்... இல்லடா.....என்னோட "ஆக்சிஜன் சிலின்டர்ல" ஆக்சிஜன் 18%. தான் இருக்கு நான் போய் 'லைப் பாய்ன்ட்' ல ஜார்ஜ் போடனும்..  ஜார்ஜ் ஃபுல் பன்னிட்டு வரேன்.. ஆமா அந்த மர்ம பொருளுக்கு பெயர் என்ன வெச்சிருக்காங்க!? " மரம் ". கி.மு 210000 வருடம் ஒரு காட்டில் இரண்டு மரங்கள்.. "என்ன இது புதிய ஜந்துவாக இருக்கிறது" ஆமாம்...பாவம் ஒதுங்க நிழல் தருவோம். என்ன இப்படி துடிக்கிறான், பாவம் சாப்பிட பழங்கள் தருவோம்.. சில வாரங்களுக்கு பின்.. அங்கே பார் வீரநடை போட்டு அந்த ஜந்து வருகிறது.. ஆமாம் ஆனால் கையில் ஏதோ வைத்திருக்கிறானே.. "ஏ....ஏ.......மரம் கத்தி முடிப்பதற்குள் அதன் ஒரு கையை வெட்டி இரு...