முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

#தீராக்கதை


ஓர் மலைப்பாம்பு படுத்துக் கொண்டிருப்பது போல அந்த தெரு காட்சியளித்தது. அந்த தெருவின் கடைசி வளைவிலிருந்து சிறுவர்கள் ஆகா.. ஓகோ.. என்று கத்திக்கொண்டே ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

தெருவின் தலைப்பகுதியில் பரந்து..விரிந்த.. கம்பீரமானஆளமரமும்.. ஆளமரத்தின் அடியில்..தாழ்வான ஒரு ஓட்டு வீடும், வீட்டின்  தின்னைகளும்.. இயற்க்கையை சிதறாமல் கண்ணுக்கு பரிசலித்தது..

கண்களை சுருக்கிக் கொண்டு.. உரலில் பாக்கை இடித்துக் கொண்டு.. யாரையோ எதிர்பார்த்து காத்திருந்தாள் அந்த கதை-பாட்டி.

"பாட்டி....பாட்டி.. இன்னைக்கு நான் தான் ஃபர்ஸ்ட்... 'நான் தான் ஃபர்ஸ்ட்' "என சிறுவர்கள் முட்டி மோதிக்கொண்டு , தின்னையில் இடித்துக்கொண்டு வந்து நின்றார்கள்.

"வாங்கடா ... இன்னைக்கு வரமாட்டிங்களோனு நினைச்சேன்... இன்னைக்கு‌‌ என்ன கொண்டுவந்திங்க." என்று நடுங்கிய குரலில் கூறி.. வாயில் வெற்றிலையை போட்டு அடக்கிக்கொண்டாள் கிழவி..

"இந்தாங்க எங்க வீட்ல இன்னைக்கு அதிரசம் செஞ்சாங்க.." என்று கையை நீட்டினான், "மணி".

கிழவி...'கண்களை விரித்து பார்த்ததில் சுருக்கம் நீங்கி இருந்தது'.

"சரி சொல்ட்ரா மணி" என்றாள் கிழவி.

"காக்கா" என்றான்.

வழக்கமான காக்கா கதையை சொல்லி முடித்தாள் கிழவி...

சிறுவர்கள்.." ஏ.... "என கத்திக் கொண்டு சந்தோஷமாக வீட்டிற்கு கலைந்து சென்றனர்..

அடுத்த நாள் மாலையில்..கையில் முறுக்குடன் "பாபு" வும் மற்றும் பல சிறுவர்களும் வந்திருந்தனர்...

 கதை-பாட்டி "சொல்றா பாபு".. என்றாள்..

"பேய்" என்றான்

சிறுவர்களுக்கு ஏற்றார் போல் ஒரு பேய் கதையை சொல்லி முடித்தால்..கிழவி.

சிறுவர்கள் பயத்துடனே... கும்பலாக வீடு சென்றடைந்தனர்..

இப்படியாக மாலை நேரங்களில் சிறுவர்கள் தங்களுக்கு பிடித்த தலைப்பில் கதைகளை கேட்பதும், கிழவி கதைகளுக்கு இலஞ்சமாக பலகாரங்களை வாங்கித் தின்பதும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது..

"ஏண்டா 'பிரபு' மத்த எல்லா பசங்களும் அவங்களுக்கு பிடிச்ச தலைப்ப சொல்லி கதை கேட்கறாங்க நீயும் 'செந்திலும்' மட்டும் ஏன்டா எந்தத் தலைப்பும் சொல்ல மாற்றிங்க..."
என்று நடுங்கிய குரலில் கேட்டாள் கிழவி.

"எங்ககிட்ட எந்த பலகாரமும் இல்ல பாட்டி எங்க வீட்டுல இருந்து தெரியாமல் எடுக்கவும் முடியாது எங்க அம்மா கிட்ட மாட்டினா.. தோளை உரிச்சிடுவாங்க..." என்றான் செந்தில்..

"இவன கேட்டா நீ ஏன்டா...பதில் சொல்றே..
இவன் ஏன்டா உம்முன்னு...  இருக்கான்..!"

"இன்னைக்கு அவங்க அம்மாவுக்கு தெரியாம முறுக்கு பானையில் கையை விட்டுட்டான்...எதுக்குடா இவ்வளவு முறுக்கு யாருக்குடா எடுத்துட்டு போறேன்னு சொல்லி அவன் அம்மா செமய அடிச்சுட்டாங்க.."

"என்னமோ போங்க டா... எனக்கு தேவை பலகாரம், உங்களுக்கு தேவை கதை.
சரி...!..இன்னைக்கு யாரு...என்ன கொண்டு வந்தீங்க....!!"..

"ராஜு "..கை நிறைய சுண்டலை கொடுத்து 'முயல்' என்றான்.

முயல் கதை முடிந்து சிறுவர்கள் கலகலப்பாக கலைந்து சென்றனர்...

வீட்டிற்கு போகும் வழியில்.."செந்திலும்", "பிரபு" வும்....ஒரு திட்டம் போட்டானுங்க...

அடுத்த நாள் மாலையில் செந்திலின் வீட்டிலிருந்து, செந்திலின் அம்மாவுக்கு தெரியாமல் திருடப்பட்ட "சோமாசும்", "பணியாரமும்" கிழவியின் வாய்க்குள் தவித்துக் கொண்டிருந்தது.

"'செந்திலே'... 'பிரபே'...சோமாசும், பணியாரமும் அருமையா இருக்கு டா ..
சரி, ரெண்டு பேரும் ரெண்டு தலைப்பு சொல்லுங்க...நான் கதையை சொல்றேன்."என்றாள் கிழவி நடுங்கிய குரலில்.

"எலி" என்றான் பிரபு .
"பள்ளிக்கூடம்" என்றான் செந்தில்.

இதுவரை, சாதாரணமான தலைப்புகளில் பழைய கதைகளை ஒட்டிக்கொண்டிருந்தாள், கிழவி. இன்று "எலி", "பள்ளிக்கூடம்"... என்று வித்தியாசமான தலைப்புகள்...
கிழவி அனுபவத்தையும் கற்பனையையும் கலந்து வெகு நேரம் யோசித்து ஒரு கதையை தயார் செய்தாள்.

பள்ளிக்குச் செல்லும் இரண்டு சிறுவர்கள்.. வழியில் ஒரு எலியை பார்த்தார்கள் அந்த "எலி" யை நண்பனாக்கிக்கொண்டார்கள்...
ஒரு முறை பள்ளியில் சுற்றுலா கூட்டிச்சென்ற போது... இந்த சிறுவர்கள் அந்த எலியையும் தனது பையில் போட்டுக்கொண்டு சுற்றுலாக்கு கொண்டு சென்றிருந்தார்கள்.. இப்படியாக,

"எலியின் பார்வையில் சுற்றுலாவை பற்றி" ஒரு கதையை சொல்லி முடித்தாள் கிழவி.

அடுத்த நாள் "செல்வி" ஜாங்கிரி கொண்டு வந்து கொடுத்து...அதே எலி கதையை கேட்டாள்...

கிழவி கற்பனையை தட்டிவிட்டு கதையை ஆரம்பித்தாள்.

"சுற்றுலாவுக்கு கூட்டிட்டு போனா பசங்களுக்கு எப்படியாவது நாம திருப்பி ஒரு பரிசு தரனும்னு அந்த எலி திட்டம் போட்டுச்சாம்...
ஒரு நாள் பள்ளிக்கு போற வழியிலே அந்த சிறுவர்களைப் பார்த்த எலி '
இன்னைக்கு நான்தான் உங்களை சுற்றுலாக்கு  கூட்டிட்டு போகப்போறேன் என் கூட வாங்க' அப்படின்னு அவங்கள தன்னோட எலி வலைக்குள்ள கூடிட்டு போச்சாம்" ...  என்றாள் நடுங்கிய குரலில்.

அடுத்த நாள் "கொழுக்கட்டையுடன்" வந்து "லதா" அதே கதையை கேட்டாள்...

கிழவிக்கு ஒரே குழப்பம் எப்படி இந்த கதையை முடிப்பது என்று.,..

"எலி வலைக்குள்ள ரெண்டு பசங்களையும் கூட்டிட்டு  போன எலி, தன்னோட உலகத்த சுத்தி காமிச்சதாம்.
எலியின் வீடு, தோட்டம்.... எலி வலைக்குள்ள இருக்கற சின்னச்சின்ன மரங்கள், அருவிகள், ஆறுகள், மலைகள் என பூமிக்கு மேல இருக்கற எல்லாமே பூமிக்கடியிலும் இருந்துச்சாம்....எல்லாத்தையும் பார்த்து இரண்டு பசங்களும்  ரொம்ப ஆச்சரியப்பட்டாங்களாம்." என்று அன்றைய கதையை முடித்தாள் கிழவி...

இப்படியாக ஒரே கதையை அடுத்தடுத்து சிறுவர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்..

**பொதுவாக சிறுவர்களைப் பொருத்தவரை கதைகளில் "லாஜிக்" எல்லாம் பார்க்க மாட்டார்கள்..
கற்பனைகளை மனக்கண்ணில் ஓட்டி பார்ப்பது தான் சிறுவர்களுக்கு மிக பிடித்த விசயம்.
(அதனால்தான் பெரியவர்களை விட புத்திசாலியாகவும் இருக்கிறார்கள்)
அதனாலயே கதைகள் சொல்லுமாறு பெரியவர்களை இம்சிப்பார்கள்...**


கோடைக்காலம், மழைக்காலம்,  இலையுதிர் காலம் இப்படி காலத்திற்கு தகுந்தவாறு காட்சிகள் மாறின... ஆனால் சிறுவர்கள் அந்த எலியின் கதையை விடவே இல்லை... கடைசிவரை அடுத்து... அடுத்து... என ஒரே கதையில் ஊரிப்போனார்கள்...

🔸🔷🔸🔷🔹🔸🔷🔷🔹🔹🔷🔸🔷🔹🔸🔹

ஒரு நாள் அந்த ஓட்டு வீட்டின் முன் ஒரு பெரிய கூட்டம் நின்று கொண்டு இருந்தது.. ஒப்பாரிகளும், அழுகுரலும், பறை அடிக்கும் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.

சிறுவர்கள் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்கள்.. தெருவின் மொத்த ஜனமும் அந்த வீட்டை எட்டிப் பார்த்துக்கொண்டு சென்று கொண்டிருந்தது..

 ஆலமர இலைகள் உதிர்ந்து இருந்தன...

இயற்கையின் அழகை வாரி வழங்கிக் கொண்டிருந்த அந்த ஊரையும், அந்த தெருவையும், மரங்களையும் பார்த்தவாறு உயரமான வானில் ஒரு கழுகு வட்டமடித்துக் கொண்டிருந்தது..

🔷🔸🔹🔹🔸🔷🔷🔸🔹🔹🔸🔷🔹🔸🔷

அது ஒரு கோடைக்காலம். மரங்களும், புல்வெளியும் நிறைந்த அந்த பகுதியில் சிறுவர்கள் எதையோ மும்முரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள் தூரத்திலிருந்து பார்ப்பதற்கு அப்படி தான் தெரிந்தது.

பாட்டியின் நடுங்கிய குரலில்( வயதானவர்களின் நடுங்கிய குரல்)  "எலி" கதையை கேட்காமல் அவர்களால் நேரத்தை கழிக்க முடியவில்லை...

பாட்டி இறந்த பின், சிறுவர்கள் கூட்டத்தில் இருந்த "பிரபு" விட்ட இடத்திலிருந்து அந்த "எலி"  கதையை தொடங்கியிருந்தான் ...சிறுவர்கள் கூட்டம் பெருமகிழ்ச்சி கொண்டிருந்தது...

அடுத்த நாள் பெரிய அரசமரத்தடியில் இருக்கும் பாறாங்கல்லின் மீது "செந்தில்" ஏறி நின்றான் "பிரபு" விட்ட இடத்திலிருந்து அதே கதையை தொடர்ந்தான்...

இப்படியாக எல்லையில்லாத கற்பனையில் அந்த "எலி"  கதை வளர்ந்து கொண்டிருந்தது...

சிறுவர்கள் எல்லாம் வளர்ந்து பெரியாளாகியும் கூட  எங்காவது பழைய நண்பர்களை பார்த்தால்... விட்ட இடத்திலிருந்து கதையை கற்பனை பண்ணி வளர்த்துக் கொண்டே வந்தார்கள் அதில் அந்த வளர்ந்த சிறுவர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி...

அந்தக் "எலி" ஒரு தீரா கதையாக மாறி இருந்தது.

 அந்த சிறுவர்களின் குழந்தைகளுக்கும் "எலி" கதையை சொல்லி வளர்த்தார்கள்...

முடிவில்லாமல் , "தீரா கதையாக " அந்த "எலி" முடிவில்லாமல் இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது....

"தீரா கதையை தீர்ப்பார் உண்டோ!!"..

✳️✳️✳️✳️✳️✳️✳️🙏✳️✳️✳️✳️✳️✳️

அப்படியே சற்று மனித வாழ்வையும் பாருங்கள் மனிதன் குழந்தையாக பிறக்கும்போதே அவன் "கதை" ஆரம்பமாகிவிட்டது ...

அவன் சாகும் வரை அவன் கற்பனை, அவன் உழைப்பு, அவன் முயற்சி மட்டுமே அந்த "கதை" க்கு காரணம்..

அவன் கதைக்கு(வாழ்வுக்கு) அவன் மட்டுமே காரணம்.

சிறப்பாக வாழ தெரிந்த மனிதன்,  ஒரு முடிவில்லாத வாழ்வையே வாழ்கிறான்.
அவன் இறந்த பின்பும் அவன் கதையை எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் பேசிக்கொண்டும், புகழ்ந்துக்கொண்டும்  தான் இருப்பார்கள்.... .

~ சதிஷ்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

#பட்டாம்பூச்சியின்_காப்பி

# பட்டாம்பூச்சியின்_காப்பி ராஜ் அவரின் வீட்டு பின்பக்க அறையில் ஜன்னல் வழியாக தோட்டத்தை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார். "வாங்க, நான் தான் ராஜ் இந்த மதிய வேளையில் எங்கள் வீட்டில் அனைவரும் சிறிய உறக்கம் கொள்வார்கள்.. ஆனால், எனக்கு இரவிலும் கூட தூக்கம் என்பதே வராது.. எதையாவது யோசித்தபடியே இருப்பேன்".. "டிவிங்...... ராஜின் வாட்ஸ்அப் மெசேஜ் குறுக்கிட்டது" "என் பொழுது போக்கே வாட்சப், பேஸ்புக், புத்தகங்கள் தான்".. வாட்சப்பில் வந்த செய்தியை படித்து விட்டு வேகமாக எழுந்து புத்தகங்கள் அடிக்கி வைத்திருக்கும் பகுதியில் எதையோ தேடினார்... "பட்டர்பிளை  எஃபெக்ட்"... "சென்னையில் சுனாமி வர காரணம் கூட இந்த பட்டர்பிளை எஃபெக்ட் ஆக இருக்கலாம் என்று வாட்சப் பில் எவனோ பார்வெட்  பன்னி இருக்கான்".. "என் நீண்ட நாள் தேடலும் அதுதான்.. இதோ "பட்டர்பிளை எஃபெக்ட்" பற்றிய புத்தகம்.." "இதில் பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த பெரிய விளைவுகள் அதே காலக்கட்டத்தில் நடந்த சிறிய நிகழ்வுகளுடன் தொடர்புள்ளதை  அலசி ஆராய்ந்து எழுதியுள்...

நினைவுகளில்_வீடு

     குமாருக்கு, அந்த தெரு நன்றாக ஞாபகமிருக்கிறது. அந்த தெருவை அடைந்தால் அதிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி தெருவை ஒட்டியபடி படிக்கட்டுகள் கொண்ட அந்த வீட்டை கண்டுபிடிப்பது சுலபம்.  போனமுறை வந்தபோது ஒரு ரிக்க்ஷாகாரர் தான் அந்த தெருவை காட்டினார். "ருக்மணி தெருவா! நேரா போய் வலது பக்கமா திரும்புனா ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும் அதை ஒட்டி ஒரு தெரு போகும். அந்த தெருவுக்கு பக்கத்து தெரு தான் இந்த ருக்மணி தெரு. அங்க யார பாக்கனும்!?.. " கையில் ஒரு வரைபடைத்தை வரைந்து முடித்து கையை கீழே போடமலயே பார்த்துக்கொண்டிருந்தார்.  யாருக்கு தெரியும் இப்போ கூட அதே ரிக்க்ஷாகாரர் அங்கயே இருக்கலாம். ஒரு புன்முறுவலோடு பேருந்துக்கு வெளியே ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். சிறுவனாக இருந்தபோது தான் எந்த கவலையும் இல்லை. விளையாட்டு , தூக்கம் னு நிம்மதியா இருந்த நாட்கள். விடுமுறை நாட்களில் கூட சொந்த பந்தங்கள் எல்லாம் எங்க வீட்டுக்கு தான் வருவாங்க. பெரியவர்களெல்லாம் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, சிறுவர்கள் நாங்க எல்லாம் எங்க வீட்டு மாடிக்கு விளையாட ஓடுவோம். ஒரு மல்லிக்கொடி படிக்...

மரமும் மனிதனும்.

மரமும் மனிதனும்...(குறுங்கதை) கி.பி 2150 ல் ஒரு நாள்..... " அங்க என்னடா ஒரே கூட்டமா இருக்கு".. இயற்க்கையாவே ஆக்ஸிஜன் தருகிற "மர்ம பொருள்" ஒன்று பூமியிலிருந்து வெளிவந்துள்ளதாம்.. அந்த வீட்டு சொந்தகாரர் பணம் வசுலித்துக் கொண்டு ஆட்களை அனுமதிக்கிறாராம்.. வாயேன்... நாமும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம்... இல்லடா.....என்னோட "ஆக்சிஜன் சிலின்டர்ல" ஆக்சிஜன் 18%. தான் இருக்கு நான் போய் 'லைப் பாய்ன்ட்' ல ஜார்ஜ் போடனும்..  ஜார்ஜ் ஃபுல் பன்னிட்டு வரேன்.. ஆமா அந்த மர்ம பொருளுக்கு பெயர் என்ன வெச்சிருக்காங்க!? " மரம் ". கி.மு 210000 வருடம் ஒரு காட்டில் இரண்டு மரங்கள்.. "என்ன இது புதிய ஜந்துவாக இருக்கிறது" ஆமாம்...பாவம் ஒதுங்க நிழல் தருவோம். என்ன இப்படி துடிக்கிறான், பாவம் சாப்பிட பழங்கள் தருவோம்.. சில வாரங்களுக்கு பின்.. அங்கே பார் வீரநடை போட்டு அந்த ஜந்து வருகிறது.. ஆமாம் ஆனால் கையில் ஏதோ வைத்திருக்கிறானே.. "ஏ....ஏ.......மரம் கத்தி முடிப்பதற்குள் அதன் ஒரு கையை வெட்டி இரு...