வாட்சப் - டெலகிராம் - சிக்னல்
இந்த மூன்று செயலிகளிலும் உள்ள நல்லவை கெட்டவைகளை நாம் தெரிந்து கொள்வோம்.
மூன்று செயலிகளை பற்றியும் அடிப்படை விசயங்களை தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்.
வாட்ஸ்அப்:
தற்போது உலகில் அதிகப்படியான பெரும்பாலோனோர் உபயோகிப்பது இந்த செயலியை தான். ஆனால் தற்போது பேஸ்புக் நிறுவனம் வாட்சப் இல் ஏற்படுத்தியுள்ள புதிய மாற்றங்களினால், வாட்சபில் பிரைவசி என்பது கேள்வி குறியாகி உள்ளது.
வாட்சப் செயலியில் இருந்து ஒவ்வொரு தனி மனிதனின் தரவுகளையும் பேஸ்புக் நிறுவனம் சேகரித்து அதனை பயன்படுத்தி அந்தந்த தனிநபர்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றாற் போல் விளம்பரங்களை வழங்க திட்டமிட்டளது பேஸ்புக் நிறுவனம்.
இதனால் உங்கள் தகவல்கள் பேஸ்புக் மிக பாதுகாப்பாக வைத்திருக்கும் என்றும், விளம்பரங்கள் அளிப்பதற்கான விருப்பங்களை தெரிந்து கொள்ள மட்டுமே இந்த தகவல்கள் பயன்படுத்தும் என்றும், வேறு எந்த செயலுக்கும் உங்கள் தரவுகள் பயன்படுத்த மாட்டோம் என்றும்.. மிகவும் பாதுகாப்பாக உங்கள் தரவுகள் நாங்கள் சேகரித்து வைப்போம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெலிகிராம்:
பிரபலமாக உபயோகிப்பது இந்த செயலியை தான். இளைஞர்கள் அதிகம் உபயோகிக்க நிறைய விசயங்களை கொண்டுள்ளது இந்த செயலி. திரைப்படங்கள், வெப் சீரியஸ் கள் போன்றவற்றை பெற இந்த செயலி அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது.
மேலும், வாட்சப் போன்றே இந்த செயலியிலும் என்ட் டு என்ட் என்கிரிப்சன் பயன்படுத்த ஏதுவாக சீக்ரெட் சாட் என்ற வசதியையும் டெலிகிராம் கொண்டுள்ளது.
பேஸ்புக் போன்று விளம்பரங்களை நம்பி இந்த டெலிகிராம் செயலி செயல்படவில்லை. விளம்பரங்களால் ஒரு ரூபாய் வருமானத்தை கூட பெற்றதில்லை.
சிக்னல்:
வாட்சப்பில், தற்போது ஏற்பட்ட மாறுதல்களுக்கு பின்தான் இந்த சிக்னல் செயலியை பற்றி பெரும்பாலானோர்களுக்கு தெரிய வந்திருக்கும்.
ஆனால், இந்த சிக்னல் செயலி ஆரம்பித்தவர் வாட்சப்பை உருவாக்கியவர் தான் என்பது பெரும்பாலானோர்களுக்கு தெரிந்திருக்காது. வாட்சப்பை உருவாக்கியவரும் வேறு ஒருவரும் இனைத்து உருவாக்கியது தான் இந்த சிக்னல் செயலி.
சிக்னல் செயலியின் சிறப்பு என்னவென்றால் அது முழுக்க முழுக்க பாதுக்காப்பான அம்சங்களை கொண்டது. மக்கள் பகிரும் எந்த தகவல்களும் எங்கேயும் சேமித்து வைக்கபடுவதில்லை. ஏன், சிக்னல் செயலியினால் கூட மக்களின் தகவல்களை பெறமுடியாத அளவு பாதுகாப்பானது.
மேலும், விளம்பரங்களினாலோ, மற்ற எந்த வகையிலோ ஒரு ரூபாய் கூட சம்பாதித்திராத சிக்னல் செயலி, அதன் பயனாளர்கள் விரும்பினால் அனுப்பும் டொனேசன்களை மட்டுமே பெற்றுக் கொள்கிறது.
நிறை - குறைகள்:
வாட்சப்:
எனக்கு , என்னுடைய தகவல்களை பெற்றுக்கொண்டாலும் பரவாயில்லை, வாட்சப் என்னுடைய பெரும்பாலான நண்பர்கள் உபயோகிப்பதாலும் , எளிமையான இதன் பயன்பாடு எனக்கு பழகிவிட்டதாலும் நான் இதை தான் உபயோகிப்பேன் என்பவர்கள் வாட்சப் செயலியை உபயோகிக்கலாம்.
ஆனால், இதன் மூலம் நமது அனைத்து தகவல்களும் பேஸ்புக் பெற்று நமக்கேற்றவாறு விளம்பரங்களை பகிரும் என்பது உண்மை.
டெலிகிராம்:
புதியவைகளை விரும்புபவர்களுக்கு டெலிகிராம் செயலி மிகவும் பிடித்தது. அடுத்து வரும் நாட்களில் நிறைய புதிய மாறுதல்களை ஏற்படுத்தி கொண்டே இருக்கும் இந்த செயலி.
திரைப்படங்கள், வெப் சீரியஸ்கள் பார்க்க இது மிகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தன்னால் பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பவர்கள் டெலிகிராம் செயலியில் உள்ள சீக்ரெட் சாட் ஆப்சனை உபயோகிக்கலாம். நிறைய புதிய அப்டேட்களை விரும்புவர்கள் இந்த செயலியை பயன்படுத்தலாம்.
சிக்னல்:
பிரைவசியை விரும்புபவர்கள் இந்த செயலியை பயன்படுத்தலாம். பிரைவசி தான் இந்த செயலியின் முக்கிய பயன்பாடு.
தங்கள் தகவல்கள் யாருக்கும் தெரியாமல் பிரைவசியாக , பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பவர்கள் இந்த செயலியை தாளாரமாக பயன்படுத்தலாம்.
~ சதிஷ்.
கருத்துகள்
கருத்துரையிடுக